கடவுளுக்கும் தெரியவில்லை

தென்றல் தேடியது மலர்கள் இல்லை
வானம் தேடியது நிலவு இல்லை
நதிகள் தேடியது அலைகள் இல்லை
ஆலயம் தேடியது பக்தன் இல்லை
அரசியல் தேடியது நற்றலைவன் இல்லை
நாடு தேடியது நல்லிளைஞன் இல்லை
மானுடம் தேடியது மனிதன் இல்லை
படைத்த கடவுளுக்கும் தெரிய வில்லை
என்ன செய்ய புரிய வில்லை

-----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
இக்கவி நிலை மண்டில ஆசிரியப்பா .வெண்பாவின் தளைக் கட்டுப்பாடுகள்
இதில் இல்லை எல்லாத் தளைகளும் கலந்து வரும்
நேரொன்றிய ஆசிரியத் தளை ---மா முன் நேர் . நிரையொன்றிய
ஆசிரியத் தளை ----விளம் முன் நிரை என்ற ஆசிரியத் தளைகளுடன்
பிற தளைகளும் கலந்து வரும். இதன் தளை ---கட்டு எல்லோரும்
இணைந்து நிற்கும் மனிதச் சங்கிலி போன்றது
அடிகள் அனைத்தும் நான்கு சீர்கள் கொண்டு நடக்கும் .
சிறந்த எடுத்துக் காட்டு : தேவராயக் கவிராயரின் கந்த சஷ்டி கவசம்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-15, 6:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே