மாலை வேளை

மாலைவேளை

அந்திசாயும் அந்தவேளை
ஆதவனும் அமரனாகி மறையும்வேளை
ஆம்பல் அரும்பி அமைதியாக மலரும்வேளை
ஆற்றுவெள்ளம் குளிர்ச்சியாக மாறும்வேளை
ஆனந்தம் மனதில் உருவாகும்வேளை
உயிரினங்கள் அமைதியை நாடும்வேளை
உடல்கள் சலித்து ஓயும்வேளை
உறவுகளை புதுமையாக காணும்வேளை
உணர்வுகள் ஊமையாக புணரும்வேளை
தாயுடன் சேய்கள் சேரும்வேளை
அவனியாவும் அயனை போற்றும்வேளை
மண்ணினங்கள் மயங்கி மகிழும்வேளை
மெல்லிடையாள் காதலுடன் கண்மூடி
காத்திருக்கும் அந்த இனியவேளை
மாலைவேளை என அறிவாயே

எழுதியவர் : ராம் (23-Feb-15, 8:28 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 146

மேலே