நான் அனாதை பேசுகிறேன்

என்னை பெற்றவள் மேல் குற்றம் இல்லை !


எவனோ ஒருவனின் பொய்யான அன்பிற்கு தன்னைக் கொடுத்தல்....

இன்று தெருவிலே என்னை யீன்று அவள் இம் மண்ணைப் பிரிந்தால் !


நானோ அனதையானேன் ஆங்காங்கே பிச்சை எடுத்தேன் !


பசியில் குப்பைத் தொட்டியில் எச்சில் இல்லை தேடி ஓடினேன்....


இருக்க இடமின்றி ரோட்டிலே என் உறக்கம் !


படுக்க பாயின்றி காகிதங்களே என் மெத்தை !


உடுத்த உடையின்றி சாக்கு பைகளே என் சல்வார் !


புசிக்க உணவின்றி புளியான் கொட்டைகளே என் பிரசாதம் !


ஆனது என் வாழ்வும் இப்படி போனது நாட்கள் பொழுதோடு வாழுவோம் இனிமே மற்றவர்களுக்கு பயனோடு !


கடவுள்களே பச்சிளம் குழந்தைகள் நாங்கள் பசியில் வாடுகிறோம் !


ஒரு விட்டிற்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் போதும் நாங்கள் வயிறார பசியாறுவோம் !


உங்களை மனதார தினம் தினம் வாழ்த்துவோம்.

எழுதியவர் : ரவி . சு (23-Feb-15, 9:00 am)
பார்வை : 574

மேலே