விவசாயி

வேல செஞ்சு வெடுச்ச பாதம்
வயல் சேறு தடவ காயம் ஆறும்....!
வறுமையவா வரம் கேட்டோம்?
வறுசமெலாம் மழை கேட்டோம்.....!
வெறும் வரட்டிக்கே பஞ்சமுங்க
கரி சோறும்
கருவாடும் கனவுலதான் மணக்குதுங்க...!
என்ன,
பெத்தவதான் போயிட்டா,
நா
பொறந்த மண்ணும் போயிட்டா??
நா
பெத்ததும் போயிருமா?

எழுதியவர் : தீபக் தீரன் (23-Feb-15, 1:10 pm)
சேர்த்தது : தீபக் தீரன்
Tanglish : vivasaayi
பார்வை : 53

மேலே