கலாட்டா

நகைச்சுவை -1
அமரிக்காக்காரன்:நாங்க தான் முதல்ல
நிலவுல கால் வச்சோம்.

அவுஸ்திரேலியாக்காரன்:நாங்க தான் முதல்ல
வினஸுக்கு போனோம்.

கீழைத்தேயன்:நாங்க தான் முதல்ல சூரியன்ல
காலை வெச்சோம்.

அமரிக்கன்:டேய் பொய் சொல்லாதீங்கடா
சூரியன்ல கால் வெச்சா எரிஞ்சு
போயிடுவோம்.

கீழைத்தேயன்:கொய்யாலே நாங்க போனது ராத்திரியில!

நகைச்சுவை-2
நீதிபதி:எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக்
கொலை செய்தாய்

குற்றவாளி:நான் ஓடவேனாம்னுதான்
சொன்னேன்.அவர் கேக்கலை

நகைச்சுவை-3
சேவகன்1:குதிரை காணாமல் போனதற்கு
மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக
இருக்காரு......

சேவகன்2:குதிரை மீது அவர் இருந்திருந்தால்
அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்று தான்....

நகைச்சுவை-4
உனக்கு ஏது 50 ரூபாய்?
"ஓர் இடத்தில் பாடினேன்.20
ரூபா கொடுத்தாங்க"
மீதி 30 ரூபா பாடுறதை
நிறுத்துதறதுக்குக் கொடுத்தாங்க

நகைச்சுவை-5
ஒருவர்:ஏங்க அவரைப் போட்டு அடிக்கிறாங்க

மற்றவர்:பின்ன என்னங்க இறந்தவர் உடலை
போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல்
ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (23-Feb-15, 2:34 pm)
Tanglish : kalattaa
பார்வை : 105

மேலே