நான் சுவாசிப்பதே உன் நினைவு தானடி 555
உயிரே...
நீ என்னைவிட்டு விலகியபின்
மறக்க நினைக்கிறன்...
சில நினைவுகளை...
வெட்ட வெட்ட வளரும்
வாழைபோல்...
உன் நினைவு மட்டும்
மலர்ந்து கொண்டே இருக்கிறது...
வெறுக்க நினைத்தாலும்
முடியவில்லையடி...
பழகிய நினைவுகளை
அழிக்க நினைத்தால்...
அதே நினைவுகள் என்னை
அனைக்குதடி...
நீயும் நானும் ரசித்தோம்
பௌர்ணமி நிலவை...
நீ உன் வீட்டிலும்
நான் என் வீட்டிலும்
மொட்டை மாடியில்...
நிலவை பார்த்தல்
என் நினைவு வரும் என்றாய்...
இப்போது உனக்கு வருமோ
வராதோ என் நினைவுகள்...
எனக்கு
தெரியவில்லையடி ...
நான் சுவாசிப்பதே உன்னை
நினைத்துதானடி...
உன்னையும் மறப்பேன்
என்னையும் மறைப்பேன்...
மண்ணில் நாளை.....