கண்ணே கண்ணீர் சிந்தாதே
கண்ணே!
கண்ணீர் சிந்தாதே!
வலிகள் என்றும்
நிரந்தரமில்லை!
பொய்கள் என்றும்
ஜெயிக்காதே!
உன்னை அழ வைக்கத் துடித்த
பொய்கள் எல்லாம்
அழுகின்ற நாளும்
தொலைவில் இல்லை!
உன்னை நீயே
தாழ்த்திக் கொள்ள
நம்பிக்கையின்றி வாடாதே!
நெஞ்சில் உறுதி இல்லையென்றால்
உலகில் நாமெல்லாம்
வெறும் கூடே!
உலகில் உனக்கோர்
இடம் உண்டு!
அதை நீ அடையும் வேளையில்
உன் புகழ் விண்ணை எட்டுமே!
கனவுகள் கோடி நிறைந்த வாழ்வில்
சிக்கித் தவிக்கும் ஆட்டு மந்தையை விட்டு மீள
கடவுள் தந்த வழி இதுவென்று
வாழ்வை புதுமையாக்கி முன்னேறவே
கண்ணே!
கண்ணீர் சிந்தாதே!
-வே. பூபதிராஜ்