அகமும் புறமும்
அநீதிகள் நெஞ்சில் நெருப்பை உமிழ
அச்சம் தவிரென உரைத்தது அகம்
அனிச்சையாய் வந்த வேர்வையின் விளைவில்
அகிம்சையில் சாதவாகி சமர்த்தானேன் புறம்
சப்பென இருந்தது உப்பில்லா சாதம்
தொண்டைக்குழி வந்து மறுத்தது அகம்
அன்னையின் ஆவல் முகம் காண
ரசித்து ருசித்து விழுங்கினேன் புறம்
அழகே உருவான பதுமை அவள்
தங்கத்தில் இழைத்த தாரகை அவள்
காதலை கவியாய் வார்த்தது மனம்
மௌனமாய் புன்னகை உதிர்த்தேன் புறம்
துக்கம் நெஞ்சை ஏதோ செய்ய
தீயில் விழுந்த புழுவாய் மனம்
இதயம் இரத்தத்தில் உறைந்து தவிக்க
கற்சிலையென கல்லாய் நின்றேன் புறம்
உள்ளம் உண்மையின் வெள்ளக்காடாய் அதை
நாகரீகம் சில நேரமாய்
அன்பு சில பொழிதாய்
அனுபவம் சில தருணங்களாக
அணை போட்டு தடுக்க
தினம் ஒரு நடிப்பில்
மனிதன் எனும் நடிகன்