காகிதம்
விந்தையுடன் சிந்தைகள் சேர
வைகறையில் வாசல் வந்த
செய்திதாள் விருந்தாளியாக சில சமயம்
முகில்கள் முடிச்சுகள் அவிழ்த்திட
மழலையின் பிஞ்சு கரங்களில்
காகித கப்பலாய் சில தருணங்கள்
காந்தியை ஏந்தும் கர்வத்தில்
பாமரன் கைகளில் சிக்காமல்
பணமெனும் பெயரில் சில பொழுது
காவியங்கள் கண்ட காதல்களில்
தூது செல்லும் தோழியாய்
காதல் கடிதங்களாகும் சில கணம்
மணிக்கணக்கில் பருவமாற்றம் நிகழ
குளிரிலும் வியர்க்கும் தேர்வறையில்
விடைதாளாய் சில மணி துளிகள்
எண்ணங்கள் ஏதோ சொல்ல
கவியெனும் கிறுக்கல்கள் அரங்கேறும்
கவிஞன் எனும் பித்தனின் பொக்கிஷம்