+நான் என்ன சொல்ல வர்றேனா+
உதவி செய்வதில் வேகம் காட்டாத கை
உதவிக்கு எதிர்ப்பதில் மிக வேகம் காட்டும்
நல்லது சொல்லத் தயங்கும் வாய்
கெட்டது சொல்ல யோசிப்பதே இல்லை
உயர்ந்த இடத்திற்கு செல்ல யோசிக்கும் கால்
தாழ்ந்த இடம் சாமார்த்தியமாய் போகும்
உண்மை நிகழ்விற்கு அழுகாத கண்
திரைப்படத்திற்கும் மெகாத்தொடருக்கும் அவ்வளவு அழுகும்
மனிதனாக வாழவந்த காரணத்தை மறந்துவிட்டு
ஜடமாக வாழ்ந்தே காலம் கடத்துகிறது இந்த மனித இனம்...