பிறவிப் பெருங்கடல் நீந்துவார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவார்

அண்ட வெளியில் நாம் ஒன்றுமில்லை என
அடங்கி நடந்தால் அது அறிவின் எல்லை
ஆவதெல்லாம் தன்னால் என்று தினம்
ஆர்ப்பரிப்பதால் ஒன்றும் இல்லை

கற்றதெல்லாம் கைமண்ணளவு இன்னும்
கற்கவேண்டியது உலக அளவு என்று
கருத்திலே நிறுத்தி தொடர்ந்தால் நாம்
கற்கும் கல்வி கரை சேர்க்கும் - பிறவிக் கடல் கடந்து
கற்கும் கல்வி கரை சேர்க்கும்...!!

எழுதியவர் : ஹரி (24-Feb-15, 11:24 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 81

மேலே