மின்னல் சம்பளம்
... "" மின்னல் சம்பளம் ""...
உழைத்து உழைத்து வியர்வை
துளிகளை நித்தமும் சுமந்தே
அனல்வீசும் மூச்சு தாகத்தால்
அலையலையாய் தெரிந்திடும்
கானல்நீரின் கரைதனை தேடி !!!
அயராத ஓட்டத்தின் இடையில்
ஒரு நொடிபொழுதின் ஆனந்தம்
கணக்கு பார்த்தே காத்திருக்கும்
வரண்ட நிலத்து சிறுமழையாய்
உள்ளத்தில் குளிர்ச்சி தந்திடும் !!!
மாதம் ஒருநாள் வந்துசெல்லும்
இல்லை வந்ததும் செல்லும்
ஒருநாள் மனதுக்கு மகிழ்ச்சி
மறுநாள் விடிந்தால் வெருச்சி
மின்னலாய் மறையும் சம்பளம் !!!.
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....