தம்பி

நாளைக்கு தம்பிக்கு கல்யாணம் மனைவியும் மகனும் போகும் தூரத்தில் இருந்தும் கல்யாணத்திற்கு போக போவதில்லை..தன் அம்மாவிடம் தம்பிக்கும் புது பெண்ணிற்கும் தங்கத்தில் மோதிரம் போட சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான் ரவி...
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான் வேலை செய்யும் கம்பெனியில் தம்பிக்கு வேலை வாங்கி கொடுத்தான் ரவி..அவனது மனைவி தான் முன் நின்று ரவியின் தம்பியை பயணம் அனுப்பி வைத்தாள்..
அவன் வெளியூர் வந்துயிரங்கிய இரண்டே மாதத்தில் ரவி தன் மனைவியையும் , மகனையும் அழைத்து கொண்டு வர இந்தியாவிற்கு கிளம்பும் வேலையில் தன் தம்பி வாங்கி கேட்ட அனைத்து பொருட்களையும் தம்பியின் குடும்பத்திற்கு வாங்கிட்டு போனான்.ரவியின் மனைவி எதுவும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை...ரவியின் குடும்பம் துபாய் திரும்பியது.
மூன்று ஆண்டுகள் போன நிலையில் ரவியின் தங்கைக்கு திருமணம் முடிவானது...சேகரும் தன் தங்கையின் திருமணத்திற்காக தன் சம்பளத்தை அண்ணியிடம் கொடுத்து நகைகள் வாங்கி வைத்தான்..திருமண செலவிற்கு என அண்ணி சேகரிடம் பணத்தை சேர்த்து கொடுத்தாள்...
சேகரும் இந்தியா வந்து தன் தங்கையின் திருமணத்தை நல்ல படியாக நடத்தினான்...மூன்று மாதங்கள் ஓடியதும் துபாய் திரும்பிய சேகர் தன் அண்ணியிடம் தங்கை மாசமாக இருப்பதாக கூறினான்...இதற்கு இடையில் ரவியின் மனைவிக்கு இத்தனை நாளும் தன் கணவன் தன்னிடம் மறைத்து சேகரின் தங்கையின் நகைகளை வாங்கி கொடுத்துயிருப்பது தெரியவந்து இருந்தது...
போனது போகட்டும் இனி சேகர் பொறுப்போடு இருக்க வேண்டும் அவனுடைய வருமானத்தில் அவனுடைய குடும்பம் இருக்க வேண்டும்.பெரியப்பா மகன் என்கிற முறையில் ஒரு தம்பிக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்தாச்சு. மற்றொரு தம்பியை எம்.சி.எ.வரை படிக்க வைத்தாச்சு இனி நாம தாங்கி பிடிக்க வேண்டாம் என்கிற முடிவை தீர்மானமாக ரவியிடம் சொல்லி இருந்தாள் பத்மினி..
பத்மினியும் இரண்டாவது குழந்தைக்காக காத்துயிருந்த நேரம் அது. தன் நாத்தனாரின் பிரசவம் சிக்கலாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லியதால் அனைவரும் ஆப்ரேசன் செய்து குழந்தையை வெளியே எடுக்க சொல்லி இருந்தனர்...சேகரும் அவனது தம்பியும் தங்களிடம் செலவு செய்ய பணம் இல்லை என கைகளை விரிக்க அவர்கள் விரித்துயிருந்த வலையில் ரவி தானாக மாட்டி கொண்டான்...
பத்மினியின் கேள்வி ஒன்று தான் இரு தம்பிகளும் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும் அவங்க செய்ய வேண்டிய செலவுகளை அண்ணனின் தலையில் கட்டியதை தன் கணவர் ஏன் செய்தார் என்பது? இதனால் ரவிக்கும் பத்மினிக்கும் இடையே சண்டை , பாசமாக இருப்பது வேறு பணத்தை பறிக்க இருப்பது வேறு என்பதையும் ரவியின் தம்பிகள் இருவரும் ரவியின் பணத்தை காலி செய்வதில் தான் அதிக கவனமாக இருப்பது பத்மினியால் ஏற்று கொள்ள முடியவில்லை...
உறவு வேண்டும் எனில் பணத்தை தண்ணீராய் செலவு செய்தே ஆக வேண்டும் என ஏற்கனவே ரவியின் தங்கையின் எண்ணம் இருந்ததால் பத்மினியால் தன் நாத்தனாரிடம் சகஜமாக பழகமுடியாமல் தள்ளி நின்றாள்...இன்று சேகரும் அதே வரிசையில் நிற்கிறான்...
ரவிக்கு குடும்பம் இருக்கிறது.இரு பிள்ளைகள் இருக்கின்றனர். குடும்பத்தோடு துபாயில் இருக்கும் குடும்பத்திற்கும் செலவுகள் இருக்கும் என்பதை இ்ந்தியாவில் இருக்கும் உறவுகளுக்கு தெரிவதுயில்லை, உடன் இருக்கும் உறவுகளுக்கும் புரிவதுயில்லை...மூண்டது பிரச்சனை சேகரிடம் நேராகவே கேட்டுவிட்டாள் பத்மினி...
அந்த நிகழ்வோடு ரவியின் குடும்பம் சேகர் மற்றும் சேகரின் குடும்பத்தோடு இருந்து பத்து அடி தள்ளி நின்றது...
தன் உடன்பிறந்தவனின் திருமணத்தற்கு தங்க மோதிரம் போட யோசிக்காத தன் கணவன் தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் மோதிரம் போட சொன்னது தெரிந்தும் அமைதியாக இருந்துவிட்டாள் பத்மினி...
மனைவி தன் நல்லதிற்காக மட்டுமே அனைத்தும் செய்கிறாள் என தெரிந்தும் ரவி தன் உறவுகளிடம் தன் மனைவிக்கு பிடிக்கவில்லை அதனால் சேகரின் கல்யாண பத்திரிக்கையை கொடுக்க வேண்டாம் என சொல்லியிருந்தான்...அழைக்காத திருமணத்திற்கு எப்படி போவது என பத்மினியும் அமைதியாக இருந்தாள்....

எழுதியவர் : பர்வீன் கனி (25-Feb-15, 12:54 pm)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : thambi
பார்வை : 261

மேலே