இயற்கை இனம்

தீண்டும் தென்றலுக்கு தெரியவில்லை போலும்
"தீண்டாமை என்றால் என்ன?" என்று
அதனால் தான் அறியாமையால் தீண்டுகிறது
தன் இனத்தை சமமாக மதிக்காத மனிதனை...

பொய்யும் மழைக்கு தெரியவில்லை போலும்
"வேற்றுமை என்றால் என்ன?" என்று
அதனால் தான் பேதமின்றி பொழிகிறது
தன் இனத்தைத் தரம் பிரித்துப் பார்க்கும் மனிதனை...

திருத்திக்கொள் மனிதா உன்னை..
இயற்கையின் இரக்கம் மறைவதற்குள்...

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (25-Feb-15, 4:42 pm)
Tanglish : iyarkkai inam
பார்வை : 174

மேலே