சந்நியாசி வேலைக்குப் போ

டேய் நான் பட்டதாரி தான். நெறைய மதிப்பெண் வாங்கியும் போட்டித் தேர்வு எதிலெயும் தேர்ச்சி பெற முடியல. என்ன செய்யறது?

ஏண்டா வாத்தியாருங்க தாராள மனப்பான்மையினாலே நீ நெறைய மார்க் வாங்கிட்ட. அதுக்குத் தகுந்த அறிவு இல்லன்னா எப்பிடிடா வேலை கெடைக்கும். நீ வேற தீனிக்கு அலையற ஆசாமியாகவும், பொழுது போக்கிலெ அதிக ஆர்வம் உள்ளவனாகவும் இருக்கற. சந்நியாசி வேலைக்குப் போ. ஏன்னா பெரும்பாலான இளம் சந்நியாசிங்களும் நடுத்தர வயசு சந்நியாசிகளும் நலலா கொழு கொழுன்னு இருக்கறாங்க. நல்லா சாப்பிடலாம் பொழுதும் நல்லா போகும் அது தான் உனக்கு சரிப்படும்.

அந்த வேலையை எங்கடா தருவாங்க?
அதெல்லாம் அரசாங்கத்திலெயும் தரமாட்டாங்க. தனியார் துறையிலயும் தரமாட்டாங்க. சந்நியாசி வேஷம் நீ தான் போட்டு பக்தியைப் பரப்பனும். நல்ல வருமானம் கெடைக்கும்.

எழுதியவர் : மலர் (25-Feb-15, 5:24 pm)
பார்வை : 113

மேலே