பத்து ரூபா

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பயணத்தில் நடந்த மற்றுமொரு சம்பவம்.

750 வழி பேருந்து... கட்டணம் ரூ. 70/=

நான் ரூ. 100/= ஐ கொடுத்தேன். பத்து ரூபா தரச் சொன்னார் தான் நாற்பது ரூபா தருவதாகவும். என்னிடம் இருந்த பத்து ரூபாவை எடுத்து விட்டுதான் பார்த்தேன் அது கிழிந்து இருந்தது. அதனை கொடுக்க முடியாது என்பதால் "இல்லை" என்று சொன்னேன். அவர் "பரவாயில்லை" என்றுவிட்டு லபக்கென்று வாங்கிக்கொண்டார்.

நான் 'பாவம்... யாருக்கு இண்டைக்கு முழிவளம் சரியில்லையோ' என்று நினைத்துக்கொண்டேன்....

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (25-Feb-15, 9:36 pm)
Tanglish : paththu roobaa
பார்வை : 151

மேலே