மீண்டு மீண்டும் மீண்டும்

கலக்கத்தில் சில நிகழ்வுகள்
கலவரத்துடன் பல நிகழ்வுகள்
கடனே என்று சில நேரங்கள்
கடனை கழிக்க சில நேரங்கள்
வாழ்க்கை ஓட்டத்தில்
சுதாரிக்க மறந்து நான்
தடுமாற்றத்தில் விழும் போதெல்லாம்
மீண்டு மீண்டும் மீண்டும் எழுந்திருந்து
புதிதாய் தொடங்க நல்வரம் வேண்டும் ...