பெண்ணியம்

உனக்கும் எனக்கும் உயிரோன்றே!
உடலுள் புதைந்த மனமொன்றே!
உன்னையும் என்னையும் ஒன்றாக
என்று நீ கொள்வாய் நன்றாக!

உனக்கும் எனக்கும் உடல் குறிதானே வேறு!
அதில் உனக்கேன் இன்னும் இந்த தகராறு!
பரிமாண கூற்றை நீ சற்று உற்று பாரு!
பெண்தானே உயிரின் ஆதி வரலாறு!

ஆடுபொருளாய் உன் உடல் கூடுபொருளாய்!
உனக்கு கவிதரும் அழகு கரு பொருளாய்!
காதலித்து நீ விடும் தெரு பொருளாய் - இருப்பதாலே
இன்னும் இருக்குது எம் வாழ்வு கறுஇருளாய்!

உடலத்தின் வலிமையதை காட்டி - வைத்தாய்
வீட்டுக்குள்ளே பூட்டி - இவ்வடிமை
எண்ணத்தை ஓட்டி - எத்துறையிலும்
தருகிறோம் கடும் போட்டி

விண் மேல பறக்கும் வித்தையும் தெரியும்
மண் மேல் நின்று புரியும் யுத்தமும் தெரியும்
கன்னியரின் கை விரல் கணிணியும் இயக்கும்
காதலென்று வந்துவிட்டால் கண்ணியம் பயக்கும்

உன் அழுக்கு ஆடைகளை துவைக்க
உன் நாவுக்கு சுவையை சமைக்க
நீ அழைக்கையில் கட்டிலில் படுக்க
பெண் எனும் எந்திரம் பிரம்மனும் தந்தானோ?

அழகென்ற சொல்லுக்குள் அவளை அடைக்கத்தான் நினைத்தாயோ!
கற்பென்று பொய் சொல்லி பெண்ணினம் புதைக்கத்தான் நினைத்தாயோ!
மனிதமெனும் முகத்தில் ஆணொரு பெண்ணொரு கண்ணென கொள்ளடா!
ஒரு கண்ணை மறு கண்தான் குருடாக்குமோ சொல்லடா!

ஆண் வேறு பெண் வேறு இல்லை
இதை அறிந்தாலே அழியும் பெண்களுக்கு தொல்லை
பெண்ணே பெரிதென்று நான் சொல்லவில்லை
ஆனாலும் அவளே அன்புக்கு எல்லை

உனக்கும் எனக்கும் உயிரோன்றே!
உடலுள் புதைந்த மனமொன்றே!
ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் குறிதானே வேறு!
அதில் ஏன் இன்னும் இந்த தகராறு!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (26-Feb-15, 4:21 pm)
Tanglish : penniam
பார்வை : 71

மேலே