நடை போடு நடை போடு
நடை போடு நடை போடு
தொப்பைக்குத் தடை போட
நடை போடு !
நடை போடு நடை போடு
நடக்கும் போது
தளர்வான உடையோடு
நடை போடு !
நடை போடு நடை போடு
மழை வந்தாலும்
கையிலே குடையோடு
நடை போடு !
நடை போடு நடை போடு
விடுமுறை நாட்களில்
நண்பர்கள் படையோடு
நடை போடு !