மகளிர் தின பாடல்

பெண்மை போற்றிடுவோம் ....மாதர் மாண்பினையே காப்போம் ..!
தாய்மையை வணங்குவோம் ....பெருமிதம் கொள்வோம் ...
பாரதம் செழிக்க ...பெண்கள் சிறக்க ...

----பெண்மை

மகளிர் தினத்தில்... மகிழ்ச்சியில் திளைப்போம்...
சிந்தித்து செயல்பட்டு ...சிகரத்தை அடைவோம் ...

வீட்டின் கண்கள்... நாட்டின் இதயமே ...
பெண்கள் நினைத்தால்..அனைத்திலும் ஜெயமே ...

----பெண்மை

மழலைச்செல்வம்... மகிழ்ச்சியாய் வளர....
உறக்கத்தை மறந்த... மெழுகு தீபங்கள் ...

உதிரம் அளித்து... உயிரை வளர்த்த...
தியாகத்தை எண்ணி.... பாதம் பணிவோம் ...

----பெண்மை

ஈடில்லா இறைவனின்.... வடிவமே தாய்தான்..
கனிவுடன் பழகும் ...ஆளுமை திறத்தால்...

உணவும் படைத்து...பிணிதனை அகற்றும் ..
பெண்ணவள் நாளும் ...அமைதியின் அம்சம் ...

----பெண்மை

இல்லத்தின் அரசி ....எண்ணத்தில் வலிமை..
வையகம் வாழ்த்தும் ..பெண்மையின் மென்மை...

குடும்பம் என்னும்... தேரை நகர்த்தும்..
வடமாய் விளங்கும் ...ஆற்றலும் பெண்ணே ...

----பெண்மை

அழகுப்பதுமைகள்....அறிவின் சிகரங்கள் ...
படிப்பில் சுட்டி ...விளையாட்டிலும் கெட்டி ...

கல்வி வேலை ...அனைத்திலும் ஏற்றம்...
மங்கையின் இலக்கு ....புவியல்ல வானம் ....

----பெண்மை

தமிழன்னை தாய்மொழி ...எதிலும் நிறைந்த ...
பூமியன்னையாய் .....பொறுமை காப்போம் ...

வீரம் பழகுவோம் ...விவேகமும் கற்போம் ..
தனித்திறன் வளர்ப்போம் ...தரணியை ஆள்வோம் ...

----பெண்மை

சேவையின் சிகரம் ...அன்னை தெரசா...
அமைதிக்கு நோபலும் ... பெற்ற மலாலா ...

விண்ணில் பறந்த....கல்பனா சாவ்லா ...
மகுடம் சூடிய ......ஐஸ்வர்யா ராய் ..

----பெண்மை
தன்னிகரற்ற.... நாட்டை அமைக்க ...
சிந்தனை திறத்தால் ...பாதை அமைப்போம் ...

உடலை பேணிடு ....உறுதியைக்காத்திடு...
திடமான மனதுடன் ...தீர்க்கமாய் முடிவெடு ...

----பெண்மை

பெண்ணே ஷக்தி ...பெண்ணே இயக்கம் ..
பெண்ணே அனைத்தும் ...உணர்ந்திடு தோழி ...

விழித்தெழு இன்றே .. வீறுகொள் நன்றே ..
புறப்படு நீயும் ....வெற்றியும் உனதே ...!

----பெண்மை

எழுதியவர் : வீ.ஆர்.கே (27-Feb-15, 7:02 am)
பார்வை : 674

மேலே