அல்லாதவை

பிரிவு என்பது நாட்டின் எல்லையில் இருக்கட்டும்,
மதங்களிடையே அல்ல...

கேளிக்கை என்பது நண்பர்களுடன் இருக்கட்டும்,
நய வஞ்சகர்களுடன் அல்ல...

பற்று என்பது சொந்தங்களின் மேல் இருக்கட்டும்,
செல்வத்தின் மேல் அல்ல...

களவு என்பது காதலில் இருக்கட்டும்,
வீடுகளில் அல்ல...

ஒழுக்கம் என்பது ஒவ்வொரு நாளும் இருக்கட்டும்,
மற்றோரின் கண்பார்வைக்கு அல்ல...

துணை என்பது வாழ்க்கையில் இருக்கட்டும்,
தீய பழக்கங்களில் அல்ல...

மிருகம் என்பது காட்டில் இருக்கட்டும்,
மனிதனின் மனதில் அல்ல...

அழகு என்பது ஒருவரின் அகத்தில் இருக்கட்டும்,
அவர்தம் தோற்றத்தில் அல்ல...

இவை யாவும் உங்களின் மனதில் இருக்கட்டும்,
இக்காகிதத்தில் அல்ல...

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (27-Feb-15, 8:29 am)
பார்வை : 71

மேலே