முன் பின் கோபம்
வரலாற்றின் ஏடுகளில் பல தருணம்
கோபம் ஆட்கொள்ளும் சில நிமிடம்
ஞானியரும் சாமானியரும் சமானம்
அழிப்பார் அழிவார் நாம் என்ன பிரமாதம்
ஒரு நேரம் போல ஒரு கேடு குணம்
நம்முள் வந்து சேர்த்திடும் கலவரம்
சுற்றமும் நட்பும் அனைவர் முன்பிலும்
நமது நற்பெயருக்கு களங்கம் விளைக்கும்
அந்நேரம் இயற்கையின் பொறுமை குணம்
நம்மை அரவணைத்து ஆட்கொள்ளனும்
சினம் விலகணும் சமாதானம் விளையணும்
கோபம் கொன்று புலனடக்கம் பழகணும்...