தேவதைகளின் தினம்

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

நாளின் முடிவில்
எல்லாருடைய உடைகளும்
அழுக்கை
அப்பிக்கொண்டிருக்க
உனது உடைமட்டும்
அழகை
அப்பிக்கொண்டிருக்கிறது !

================

உனது கூந்தல்
ரோஜாக்களின்
அழகுநிலையம் !

================

உடைந்த
கண்ணாடிச்சில்லுகள்
போலத்தான்
இருந்தன
எனது நாட்கள் !
நீதான்
கலைடாஸ்கோப்
ஆக்கினாய் !

================

எனக்கு
ரசனைப்பைத்தியம் தான்
பிடித்துவிட்டது !
ஏனெனில்
நீ
கொட்டாவி விடுவதையும்
என்னால்
ரசிக்க முடிகிறதே !

================

வளர்பிறை
தேய்பிறை இல்லா
எனது வானத்தில்
நீ வரும் நாட்களில்
பௌர்ணமி !
நீ வராத நாட்களில்
அமாவாசை !

================

காதலர் தினமென்று
பிப்ரவரி 14 ஐ
அறிவித்தது போல
தேவதைகள் தினமென்று
உனது பிறந்தநாளை
அறிவித்துவிடவா ?

================

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (28-Feb-15, 6:24 am)
பார்வை : 9560

மேலே