கண்ணீர்

கண்ணீர்
கண்ணுக்குள் கருத்தரித்த
கவலையின் குழந்தை நீ
உடைந்த மனதினூடே
ஊற்றெடுக்கும் உதிரம் நீ
நான் வாடி வருந்தும் போதெல்லாம்
நீ ஓடி வருகின்றாய்
பரிதவிக்கும் போதெல்லாம்
பரிந்து வருகின்றாய்
தனித்திருக்கும் போதும்
தவித்திருக்கும் போதும்
நீயே என் துணையாகி நிற்கின்றாய்
துணையாகிப்போன உன்னை
துடைத்தெறிய மனமின்றி
கன்னங்களில் கசியவிடுகிறேன் ............
கொதிக்கின்ற இதயத்தை சுட்டும் விதமாய் நீ
சூடாக சுரக்கின்றாய்
கனக்கின்ற மனதிற்கு மருந்தானாய்
கவலைக்குக் களிம்பானாய்
காய்ந்த சுவடாகி ...
எனை ப்பிரியாமல் இருக்கின்றாய்
துளித்துளியாய் உதிர்கின்றாய்
மீண்டும் மீண்டும் உயிர்க்கின்றாய்
by Dr.A.P.SathyaSwaroop.

எழுதியவர் : ஏ .பி .சத்யா ஸ்வரூப் (28-Feb-15, 1:40 pm)
Tanglish : kanneer
பார்வை : 120

மேலே