முதுமைக்காதல்
மழை நாள் இரவினிலே
மன்னன் முகம் கண்டு
மங்கை நான் லயித்திருக்க
கொஞ்சு தமிழ் பேசிடவே
கோதை நான் துடித்திருக்க
பிஞ்சு விரல் நீ பிடித்து
பித்தனாய் பிதற்றுகிறாய்
பக்கத்துணை நீயிருந்தால்
பகலிரவாய் அருகிருந்தால்
பட்டினியிலும் பகிர்ந்தளித்து
பசியினை மறந்திருப்பேன்
முடியனைத்தும் நரைத்தபின்னும்
உன் முகத்தை நான் ரசிப்பேன்
ஊன்றி நடக்கும் கம்பாய் நான்
உன் கையில் ,,, தான் இருப்பேன்
பொக்கை வாய் சிரிப்பினிலே
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே
நித்தம் நீ சிரித்திருந்தால்
நிம்மதியாய் நான் செல்வேன்
வந்து விடு விரைவில் என்று
விடை பெற்று நான் நடப்பேன்
சென்று விட்ட இடத்தினிலும் -எனை
வென்று விட்ட உன் வருகைக் காய்
என்று நீ வருவாய் என
ஏக்கமுடன் காத்திருப்பேன் .
byDr.A.P.SathyaSwaroop