திருமண வாழ்த்துமடல்

திருமண வாழ்த்துமடல் ....

* பூ மழை பொழிந்திட
புன்சிரிப்புடனே
உன்னவன் அருகில் நீ ...

* மழலைகள் சூழ்ந்திட
ஆனந்தத்தில்
சுற்றதாருடனே நீ .....

* செல்வங்கள் பெருகிட
செல்வச்
செழிப்புடனே நீ ...

* உன்னவரின்
வெற்றியில்
பூரிப்புடனே நீ ...

*சாதிக்க துடித்திடும்
புதுமை
பெண்ணாய் நீ ......

*குழந்தைகளின் உழைப்பில்
உன்னையே
வியக்கும் நீ .....

*மங்கையர் மகிழ்ந்திட
சுற்றத்தார் சிறந்திட
சமுதாயம் திருந்திட
உன்னையே உருக்கும் நீ ....

* உன் பெருமையை
வையமும் வானமும்
புகழ்ந்திட
அதை பார்த்து வாழ்த்து
கூற
என்றென்றும் உன்னுடனே
நாங்கள் ..........

சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (28-Feb-15, 3:10 pm)
பார்வை : 275

மேலே