மூன்றடி

மூன்றடி

அடிமுடி எட்டவியலா
அளவுகோளற்ற
நேசத்தின்
நிறைகுடம் நிரம்பித்
தழும்ப
நான் எனது
அசுவமேத
ராஜசூய யாகங்களைத்
தொடங்கிய
வேளையில் -
வா ! வந்து
மனம் நிறை
என்றழைத்த போது
வந்து
என் மனம் நிறைந்த
நீ ....
வா மன அவதாரம்
எடுத்து
மூன்றடி கேட்டு
முதலடியை
என் இதயத்தில் வைத்தாய் ...
இரண்டாமடியை
நம் காதலில் வைத்தாய் ...
மூன்றாவதடி
எங்கு வைக்கவென
எனைக்கேட்கிறாய் ...
வினாவிற்கு
விடையின்றி
மகாபலி போலவே
என் சிரம் காட்டுகிறேன்
உன் தாழ் வைத்திருத்தி
நற்கதியடைச் செய் !

எழுதியவர் : பாலா (28-Feb-15, 10:16 pm)
பார்வை : 122

மேலே