குடிசைவீடு

மாட மாளிகையின் அருகே
மண்ணால் ஆன சின்னதாய்
நான்கு பக்க சுவரின் மேல்
தென்னங் கீற்றால் வேய்ந்த கூரை
இதுதான் எங்கள் வீடு

வீட்டிற்கு விளக்கு ஒளி இல்லை
நிலவுதான் எங்கள் வீட்டின்
விளக்கு ஒளி

எங்கள் தாய் நிலவை காட்டி
சோறு ஊட்டினாள்
நிலா ஒளியில் படித்து

விண்வெளி சென்றேன்
அங்கிருந்து பார்க்கையில்
மாட மாளிகைகள் தெரியவில்லை
கூரை வேய்ந்த எங்கள் மண் வீடுதான்
தெரிந்தது .

எழுதியவர் : கவியாருமுகம் (1-Mar-15, 12:39 pm)
பார்வை : 197

மேலே