நண்பா
மது மேடையில் எனக்கு சரியாசனம் தந்தவன் நீ
மது அருந்தி நீ மசக்கை காரன் போல் வாந்தி எடுக்கையில்
உன்னை அக்கறையோடு அழைத்தது சென்றவன் நான்
அப்போது மட்டும் நான் உன் தாயாக அல்லது மனைவியாக...
பேனா பிடித்த கையேடு நீ எழுந்து சென்று வாங்கிப்புகைக்கும்
வெள்ளை பிரம்பின் அழகில்தான்
நான் ஆண்மையின் அழகை உணர்கிறேன்...
எனக்கு அறிவுரை சொல்லும் நேரத்தில் நீ விவேகானந்தா
சொன்ன கையேடு அடுத்த வீட்டு அக்காவை எட்டிப்பார்கும்போது மட்டும் நீ நித்தியானந்தா
கோபம் உன் வெப்பாட்டி உன்னோடு அவ்வப்போது வருபவள்
ஆனால் உன் பொண்டாட்டி உன்னோடு எப்போதும் கூடவே இருப்பவள்...
நண்பா நீ கவிதை கேட்டாய்
காலில் வெந்நீரை ஊற்றியவன் போல் ஓர் இடத்தில் நின்று பேசாத உன் நடை
தண்ணீர் குடித்த போத்தல் மூடி மூடாத உன் நிதானம்
பவுடர் மூடி மூடாத உன் பொறுமை
அவ்வப்போதைய சிக்கனச்சிரிப்பு
அடிக்கடிக்கேட்கும் கண்ணதாசன் பாடல்
அத்தனைக்கும் மேல் உன் பக்குவம்
நண்பா நீ உன்னைப்பற்றி கவிதை கேட்டாய் நீயே ஒரு நட்பின் கவிதையடா...