எல்லாம் நீ
உன் பார்வையில் பிணி தீரும்
குளிர் போர்வையும் இனி தூரம் ....
புது வானவில் கண்டேன் உன் உதட்டின் ஓரம்
வண்ணங்கள் யாவும் உந்தன் சாயம் ...
நீ என்னை சேர்ந்தால்
என் வாழ்வு நீளும்
நீ பிரிந்தால் உயிர் தடுமாறும் ...
நீ தொட்டால்
பூக்களில் தேன் ஊரும்
உன் வாசம் அதற்கு உரமாகும்
நீ சிரித்தால் மொட்டுக்கள் வயதுக்கு வரும் .....
உன்னை தேடியே மேகமும் நகரும்
உன்னை தொட்ட துளிகள் சிற்பி இல்லாமல் முத்தாகும் ....
நடந்து போகும் சோலை நீ
மமதை அழிக்கும் பேதை நீ
வறண்டு போன என் இதயத்தில்
தூறும் சாரல் நீ
என் உயிரை எரித்தால் கிடைக்கும் சாம்பல் நீ ....