காலம்

பச்சை மண் தரை
புல் வருடும்
நிசப்தமான மோன நிலை
உட்செவியில்
கேட்கும்
மெல்லிய நாதம் ..
என்னைச் சுற்றிலும்
அரவம் இல்லை
என்னைச் சுற்றிலும்
யாரும் இல்லை..
அங்கு நானும் இல்லை..
கொஞ்ச நேரமோ
மணித்துகளோ..
தெரியவில்லை..
ஒன்றுமே
தெரியவில்லை..
ஒன்றுமே..
தோன்றவில்லை..
அது..
இறந்த காலமா..
நிகழ் காலமா..
எதிர் காலமா..
எதுவுமே
இல்லாமல்..
இருந்த காலமா..
தெரியவில்லை..!

எழுதியவர் : கருணா (2-Mar-15, 11:35 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : kaalam
பார்வை : 54

மேலே