சிங்கைச் சூரியன்
இது
ஒரு நீர்த்துளி
நீராவிக்கப்பல் விட்ட கதை.
மானின் ரத்தம் சொட்டும்
சிங்கத்தின் வாயில்
மாறாக தண்ணீர் கொட்டிய கதை.
தூண்டில் கிராமம் ஒன்று
துறைமுகமான கதை
உலகில் பெரிய
துறைமுகமான கதை.
பெட்டிக்கடை ஒன்று
உலக வர்த்தகத்தில்
உயர்ந்த கதை.
பதிநான்காம் நூற்றாண்டில்
பெயர்சூட்டு விழா
மலாய் இளவரசர்
மழைக்காற்றுக்கு ஒதுங்கிய நேரம்
மதிப்பிடமுடியா ஓர் உருவம்
ஓடி ஒளிகையில்
உதித்த பெயர்.
இருக்கலாம் சிங்கமென்று
நினைத்திருந்த இளவரசு
இட்ட பெயர் சிங்கப்பூரா.
இன்றவர் வந்திருந்தால்
லீ குவான் யூ என்ற
ஒற்றைச் சிங்கத்தை கண்டிருப்பார்
நான் கண்ட சிங்கம் இதுவே என்றிருப்பார்.