மாற்றம் வருமோ -சகி
வாழ்க்கை
மண்ணில் நம் சுவாசக்காற்று
கலங்கும் நிமிடம் ஏதும் அறியா
மழலையாக பிறக்கிறோம் ....
அன்று நம்மை சுற்றி
சில உறவுகள் சிரித்து மகிழ ....
நம் சுவாசம் நம்மை விட்டு
பிரிந்து நம்மையே நாம்
மறக்கும் நிமிடம் ..
நம்மை சுற்றி சில
உறவுகள் அழுதுக்கொண்டு ...
இம்மண்ணை விட்டு நாம்
செல்லும் நிமிடம் எதுவும்
வருவதில்லை உறுதுணையாக ...
நாம் வாழும் நாட்களில்
அனைத்து உறவுகளிடமும்
விட்டுக்கொடுத்து வாழ்வோம்....
கடந்து செல்லும் காலங்கள்
திரும்ப பெறப்போவதில்லை...
பாகுபாடு மறந்து
வாழ கற்றுக்கொள்வோமே....
சாதி மதம் கடந்து....
ஏழை பணக்காரன் என்ற
வேறுபாடு இல்லாமல் இனியாவது
வாழும் காலம் வருமோ?
தன்னலம் மறந்து
எளியோரின் வாழ்க்கை தரம்
உயரும் காலம் வருமோ?
நம்மில் மாற்றம் கண்டால்
மட்டுமே நம் நாட்டிலும்
மாற்றம் காண முடியும்....
மாற்ற வேண்டியவை அதிகமே
உண்டு நம்மில்....
என்று மாறும் இந்நிலை
நம்மில் முழுமையாக ?