அம்மா நீ எங்கே

அம்மா…!
என்ன பெத்தெடுக்க என்ன பாடு பட்ட..
ஒரு நிமிஷம் மூச்ச பிடுச்சு ..
என்ன பூமியில விட்ட…
இப்ப நீ போயி ..
என் கண்ணுல ஏன் கண்ணீர் ஒழுக விட்ட …

அம்மா…!
கையில சோத்து உருண்டைய வச்சுகிட்டு ..
வானத்து உருண்ட நிலாவ பார்த்து..
வந்துடு கிட்டன்னு சொல்லுவியே ..
என்ன மடியில வச்சுகிட்டே..

அம்மா…!
நாடு நெத்தியில நீ முத்தம் கொடுக்கையில…
நா கொண்ட காதலுக்கு அளவில்லையே..
அத்தன பாசம் காட்டிட்டு..இப்ப
இடையிளியே.. அத்துக்கிட்டு போனியே..

அம்மா…!
எனக்கு வயசாகி போகிடுச்சுனு …
நீ விலகி போனாயோ..
இல்ல உனக்கு வயசாகி போகிடுச்சுனு…
விலகி போனாயோ.. தெரியலியே..

அம்மா…!
உறக்கம் வராம உருண்டப்ப..
மடியில போட்டு நீ தாலாட்ட..
எல்லாத்தையும் மறந்து தூங்குனேனே..
மகனொருத்தன் நா இருக்கேனு..
நினைக்கமா நிரந்தரமா தூங்கிட்டியே…

அம்மா…!
என்னோட கடவுளா நீ இருக்கையில..
வேற எந்த கடவுளையும் கும்பிடளியே…
1.(கடவுள்னா கண்ணனுக்கு தெரியாம இருக்கனுன்னு…
எனக்கு புரிய வைக்க…
காணாம போயிட்டியோ…)
என்னோட கடவுளா நீ இருக்கையில..
வேற எந்த கடவுளையும் கும்பிடளியே…
2.(அதுக்கு தான் ஆண்டவன் எடுதுகிட்டனோ பொறாமையில..
உன்ன இனி அவன் கும்பிடனுனு…)

அம்மா..!
கண்ணு ரெண்டும் கலங்குதும்மா …
கால் நடக்க பாதை இருந்தா..
நீ போன இடம் தேடி வந்துருப்பேன்..
காணாத உலகுக்கு கடவுளா போயிட்டியே…
கண்ணு ரெண்டு கலந்குதும்மா…
இன்னும் காலம் எத்தன இருக்கோ..
உன் கால் அடியில வந்து கிடக்க…


இப்படிக்கு..... சிந்து விக்னேஷ்

எழுதியவர் : சிந்து விக்னேஷ் (3-Mar-15, 3:17 pm)
சேர்த்தது : sinduvignesh
Tanglish : amma nee engae
பார்வை : 421

மேலே