நிலவைப் பிடித்திடலாம்

ஏமாற்றத்தின் உச்சியில்
நீ இருந்தால்
உன் நிழல் கூட
அந்நியமாய் தோன்றும்
நிழலும் உன்னை
வலை வீசிப் பிடிக்கப் பார்க்கும்
நிஜங்கள் எல்லாம் நிராகரிக்கப்படும்.
போலிகளும் புலியாய் பாயும்
உண்மைகள் அழிக்கப்படும்
உன் நிழலைப் பார்த்தே பயந்தால்
உலகில் போராடுவது கடினம்
சலனங்கள் எல்லாம் சகதியில் தள்ளு
குழப்பங்கள் எல்லாம் குப்பையில் கொட்டு
சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்
அந்த நிலவைக் கூட
கை நீட்டிப் பிடித்துவிடு
எட்டி விடும் தூரம்தான் வானம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (3-Mar-15, 3:23 pm)
பார்வை : 157

மேலே