பாசம்
![](https://eluthu.com/images/loading.gif)
தாயும் இல்லை
சேயும் இல்லை
தன் முதுகில்
இருப்பது
உறவும் இல்லை
தகிக்கும் வெயிலில்
தனித்துத்
துடித்துத்
தவித்துக் கிடந்த
சின்னஞ்சிறு
விலங்கொன்றைத்
தன்னலமற்றுத்
தாங்கிச் செல்கிறது
தன் குஞ்சுகளைக்
கூடச் சுமக்க முடியாச்
சிறு பறவை
பாசம் என்னும்
பொது மொழியில்
பேசியபடி..