உலகத்தின் கடைசி மனிதன்
![](https://eluthu.com/images/loading.gif)
கந்தக அமிலக்கடல்
ஆர்ப்பரித்தது !
சலனமற்று ஓடியது
நைட்ரிக் அமில நதி !
சூரிய ஒளியை
வடிகட்டி
புற ஊதாக்கதிர்களை மட்டும்
அனுமதித்துக் கொண்டு
கார்பன் மோனாக்சைடு படலம் !
பிளாஸ்டிக் மரங்களின்
அடர் காட்டில்
கூட்டமாக கர்ஜித்தன
ராட்சத பாக்டீரியாக்கள் !
வான் அடைத்துப்
பறந்தபடி
வைரஸ் பறவைகளும் !
கார்பன்டை ஆக்சைடை
உள்ளிழுத்து
ஆக்சிஜனை
வெளியிட்டுக் கொண்டிருந்தான்
இந்த உலகத்தின்
கடைசி மனிதன் !