யார் அவள்
யார் அவள்?
யார் அவள்?
குழந்தை மனமும், குறும்புத்தனமும் கொண்ட குட்டி தேவதை
அகத்தின் அழகு, முகத்தில் தெரிய அழகாய் சிரிப்பாள், அன்பாய் பழகுவாள்
சீண்டி விளையாடுவாள், சிறு பிள்ளை போல் பழகி, சிரித்து மகிழ்வாள்
சினம் கொள்வாள், சிறிது நேரத்தில் மறப்பாள்
சின்னிஞ்சிறு விஷயங்களுக்காக கலங்குவாள், கண்ணீர் வடிப்பாள்
வழக்காடுவாள், வாடிய நெஞ்சங்களுக்கு ஆறுதல் கூறுவாள்
உரிமைக்கு குரல் கொடுப்பாள், உள்ளதை கூற தயங்க மாட்டாள்
உண்மையாய் பழகி, உள்ளத்தை கொள்ளை கொள்வாள்
யார் அவள்?????????????
அவளே என் காதலி……………
-சீ.ப