எந்தன் வீட்டு மருமகள்
வார்த்தை அது கவிதையானது
வண்ணச் சிறுமி பெண்ணானாள்
நாளை எந்தன் தாயிவளே - என்
நாட்டின் வீரத் திரு மகளே....!!
கூரைப் புடவை கொண்டுவந்தேன்
குயிலின் இசையும் தாழ்ந்தது ஏன் ?
வெட்கம் என்னும் ஸ்வரம் எடுத்து
வெண்ணிலவே நீ மவுனிப்பதாலோ..?!
எந்தன் வீட்டு மருமகளே
என்ன வேண்டும் சீர்வரிசை ?
அன்பு உண்டு பாசம் உண்டு உன்னை
அரவணைக்க எழில் வாழ்க்கை உண்டு...!!
வாழ்க நீ தாயே இவ் வையகம் செழிப் புறவே....!!