மெல்லப் புதைந்திடும் என்னினமே-பாகம் 2

மெல்லப் புதைந்திடும் என்னினமே-பாகம் 2
******************************************************************
******** இந்த எனது கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை என்பதை மீண்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன் .பெரும்பாலும் குற்ற செயல்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்கள் அவர்களின் பதின்ம வயதிலேயே ஒருவித மனநிலையை பெறுகிறார்கள்.அதாவது சக வயதினர் அவர்களுக்கு தரும் தொல்லைகள்,தொந்தரவுகள் அல்லது வேறு சிலருக்கு நிகழும் இது போன்ற கொடுமைகள் (இதில் நான் மற்ற இனத்தை சேர்ந்த சகவயதினர் என்று சொல்லப் போவதில்லை ,மேலும் இது குற்றத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றிய கண்ணோட்டம் மட்டுமே என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்!) ஒருவித பாதுகாப்பற்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது .இதனால் அவர்கள் தனியாக இயங்கத் தயங்கி ,குழு மனப்பான்மையே இதற்கான தீர்வு என்று என்ன தொடங்குகிறார்கள்.
********இதில் அவர்களின் குடும்பம் அதாவது பெற்றோர் மற்றும் உடன்பிறப்பினரின் பங்கும் இருக்கவே செய்கிறது.!கலங்கி நிற்கும் அவர்களைக் கண்டு கொள்ளாத பெற்றோர் ,கேலி செய்யும் உடன்பிறப்புக்கள் ,அல்லது யாராவது உன்னை அடித்தால் நீயும் அடி என்று வசனம் பேசும் பெற்றோர்,தவறே செய்யா பிள்ளை எனினும் தவறு இவன்தான் செய்திருப்பான் என்று மனதை உடைக்கும் பெற்றோர் ..இருக்கும் வேலையையே பார்க்க முடியவில்லை ,இதில் நீ வேறையா ..போக போக சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி அவர்களை மீண்டும் மீண்டும் பிரச்சனைக் குள்ளாக்கும் பெற்றோர் இன்னும் எத்தனை எத்தனையோ வகையில் உள்ளவர்களின் குடும்பத்தில் பிறந்து வாழும் ஓர் இளைஞன் நிச்சயம் சமுதாயத்தின் பிரச்சனையாகத் தான் வளர்வான்!
********** மேலும் அவனை சுற்றி இருப்பவர்களிடம் தான் அவன் ஆறுதலோ அறிவுரையோ பெற முடியும்..அந்த நேரத்தில் நல்லவர்கள் அவனது நண்பர்கள் ஆனால்,அரவணைப்பவர்கள் அறிவுள்ளவர்கள் ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் ஏற்கனவே சமுதாயத்தால் ஒதுக்கி விடப் பட்டவர்கள்,அறிவுரை சொல்லக் கூட பிறர் அஞ்சும் நபர்கள் ,உருப்படாதவர்கள் என்று ஊரறிய பெயரெடுத்தவர்கள் கையில் இந்த இளைஞன் சிக்கினால் நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.படிப்பு சரியாக வரவில்லை என்று பாதியில் பள்ளியை விட்டும் நீங்கிய பிள்ளைகள் கூட எதாவது தொழில்துறையில் ஈடுபட்டு வாழ்க்கை பாதையில் முன்னேறி விடலாம்...ஆனால் படித்து கொண்டே இருக்கும்,பிரச்சனையை பகிர ஆளின்றி,தவறான பேர்களிடம் மாட்டிக் கொள்ளும் மாணவன் எப்படி முன்னேற முடியும் ?..
*********** இந்த நேரத்தில் குண்டர் கும்பல் என்று தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் சகோதரர்கள் தயவு செய்து மாணவர்களிடம் உங்கள் சிந்தனையை புகுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன்..நீங்கள் செய்வது சரியா?..தவறா என்று நான் சொல்ல வரவில்லை...ஆனாலும் ,ஒரு இளைஞனை அதிலும் மாணவனை நீங்கள் குண்டர் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது சமுதாயத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகம் என்பதை மட்டும் அடித்து சொல்கின்றேன்.அது நாட்டின் சட்டப்படி மட்டுமல்ல ,உங்களின் கும்பலின் சட்டப் படியும் கூடாத ஒன்றே என்று நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் சாதனைகள் சாகசங்களை உங்கள் வயதினரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...முளையும் பயிரில் விசத்தை கலக்காமல் இருங்கள்.இதுவே நீங்கள் சமுதாயத்திற்கு செய்யும் மிகப் பெரிய நன்மை!போதுமான அன்பு கிடைக்காத பிள்ளைகளிடம் நீங்கள் என்ன வகையான சமுதாய அக்கறையை எதிர்பார்க்க முடியும்?! சொல்புத்தி,சுயபுத்தி இரண்டுமே என்னவென்று அறியாத பிள்ளைகளை நீங்கள் அடிப்பதால் மட்டும் திருத்தி விடலாம் என்பதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது!
*********** அது அது அவனவன் தலையில் போட்ட விதி என்று சொல்லி ..பிள்ளைகளை கை கழுவி கடமையில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணாதீர்கள்...நீங்கள் உருவாக்குவது அடுத்து வரும் தலைமுறையை நகர்த்தி செல்லப் போகும் தலைவர்கள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள் !..இது பெற்றோருக்கு மட்டுமல்ல ...நீங்கள் சந்திக்கும் எந்த இளைஞனையும் நீங்கள் யாராக இருந்தாலும் இந்த கோணத்திலேயே பார்த்து பழகுங்கள் .மாற்றங்களை நிச்சயம் நம்மால் கொண்டு வர முடியும்! (தொடரும் ..)

எழுதியவர் : அபி (4-Mar-15, 12:25 am)
பார்வை : 242

மேலே