எதையோ தேடி

வேகத்தடைகளாகிய
வெற்புகளும்,,,
நஞ்சாகமாறிய
மாருதங்களும்,,,
அமிலத்துளிகளாய்
ஆலித்துளிகளும்,,,,
கழிவுநீராய்
கடல்நீரும்,,,
மாறுது ஒருபுறம் ........
அடடே !!
மக்கள் பெருக்கத்தினால்
இப்பார்ச்சிறுத்ததோ???
இல்லை
இப்பார்ச்சிறுத்ததனால்
மக்கள் தொகைப்பெறுத்ததோ ??
இங்கு,
முன்னால் தெரிவதோ
முப்பதடுக்கு கட்டடம்,
பக்கத்தில் இருப்பதோ
பத்தடுக்கு கட்டடம்,
தொலைவில் தெரியும்
என் மாளிகையின் வாசலில்
பச்சைநிறப் புற்கள்
செயற்கையாய் ......
நா வரளுது ,,
ஆனால் ..
அடுத்த வீட்டில்
அகலத் தொட்டியில் குளிக்க
ஒரே ஒருகுளம்...........
மேலும் ,,,
சிப்பியில்லா முத்துக்களும்
பாசியில்லா பவளங்களும்
தாயில்லா சேய்களும்
பிறக்கும் காலமாயிற்று.....
மின்மினிப் பூச்சிகளோடு
விளையாடிய தெருவிளக்குகள்
வாழ்க்கையிழந்து நிற்கிறது
வாகனங்களின் புகையால்.....
உயிர்கோளமதில் உயிர்கள் காக்க
இயற்கையளித்த பெருங்கொடையாம்
உயிர்வழிப்படலம்
ஓட்டை விழுந்து
தவிக்குது .......
மறுபுறம் ,,,
நினைத்ததை நிமிடங்களில்
நிறைவேற்றும் விஞ்ஞானம்
நிகழ்கால வாழ்வை
நிலைப்பெறச் செய்யும்மா ???
எல்லாம் போக ,,
எதிர்பார்ப்போடு
எதையோ தேடி
அலைகிறோம் நாம் .....

எழுதியவர் : சுடர்விழி.இரா (5-Mar-15, 5:36 pm)
Tanglish : ethaiyo thedi
பார்வை : 104

மேலே