எந்தன் உலகமடா

வித்தை காரனின் மாயஜாலம்
பார்த்தேன் ரசித்தேன்
விந்தை உலகமடா

அரிதாரம் பூசி பல வேடம் புனைந்து
வேஷம் களைத்தான்
பார்த்தேன் ரசித்தேன்
விந்தை உலகமடா

செவ்வாயில் சென்று வாழ
முடியுமா என்று ஆராயிச்சி
செய்யும் விஞ்ஞான வளர்ச்சியை
பார்த்தேன் ரசித்தேன்
விந்தை உலகமடா

விண்ணில் சென்று
சாகசம் நிகழ்த்தும்
வீரர்களின் சாகசத்தை
பார்த்தேன் ரசித்தேன்
விந்தை உலகமடா

இறைவன் கொடுத்த
இவ்வுலகை பார்த்து
ரசிக்க என்னை பெற்றுடுத்த
தாயும் தந்தையும்
எந்தன் உலகமடா

எழுதியவர் : கவியாருமுகம் (5-Mar-15, 5:51 pm)
பார்வை : 93

மேலே