பேதைமை போக்கிடு

நடக்கவே முடியாததைக் கூட
நடந்ததாய் சித்தரிக்க
சாமர்த்தியம் உனக்கிருந்தால்
நிலவைக் கூட
புட்டியில் அடக்கிடலாம்!
ஒரு புட்டியில்
ஆகாயமும்,பூமியும்
சிறைவைக்க
உன் அறிவை விரிவு செய்தால் போதுமானால்
அறிவுள்ளவன் மீனுடன் சேர்த்து
கடல் நீரையும் அள்ளிடுவான்!
அறிவற்றவன் கிடைத்ததையும்
கோட்டை விட்டிடுவான்!
புத்தியுள்ளவன் பிழைத்துக் கொள்வான்!
முட்டாள்கள் எதையும் சாதிப்பதுமில்லை!
புத்திசாலிகள் எதையும் காட்டிக்கொள்வதுமில்லை!
ஆகவே அறிவை வளர்த்திடு!
பேதைமைப் போக்கிடு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (5-Mar-15, 6:08 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 65

மேலே