கோலம் சொல்லும் மாண்பு

மங்கையவள்
புலராத காலையில்
வசந்தங்கள் வரவேற்கப்
புள்ளியிட்டு கோலமிட்டால்
கோலமிட்ட மங்கையின்
மாண்பினை கூறிடலாம் தப்பின்றி!
புள்ளியிட்டு கோலமிட்டாலும்
பூக்கோலமிட்டால் மென்மையானவள்!
சிக்கல் கோலமிட்டால்
சிக்கல்களைப் பொடியாக்கிடுவாள்!
பறவைகள் கோலமிட்டால்
இலேசான மனம் கொண்டவள்!
கோடுகளையே அதிகம்
கோலத்தில் இட்டால்
கோடு போட்டு வாழ்பவள்!
சத்தியமாய் உரைப்பேன்
மார்கழி மாதத்தில் மட்டும் தேடாதீர்!
நித்தம் செய்யும்
அலுவலுக்கு நடுவே
அவள் சிரத்தை
கோலத்தில் காண
நித்தியப்படி காணுங்கள்!
ஆனால்
இவை உண்மையோ இல்லையோ,
கண்களுக்கு குளிர்ச்சியும்,
கருத்தை ஒருமிக்கவும்,
மூளையின் ஆற்றலின் வேகமும்,
ஞாபகத்திறனும்,
சிந்திக்கும் திறனும்,
மனோநிலை மாற்றமும்,
உடற்பயிற்சியும்,
வளர்ச்சித் தரும்
வண்ணக் கோலங்கள்
வாயிலிலே நீ இட்டால்
அதிகாலையிலே
அழகான வரவேற்புரை!
சித்திரங்கள் உன்னை
விசித்திரமாக்கலாம்!
முன்னோர் கூறிய எதுவும்
வீணென்று ஆனதில்லை!
ஸ்டிக்கர் கோலங்களை
வீசிவிட்டு
புள்ளிக் கோலங்களை
போட்டிடுங்கள் புள்ளிமான்களே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (5-Mar-15, 6:21 pm)
பார்வை : 84

மேலே