கடவுளைக் காணோம்
கடவுளுக்கு ஒரு நாள்
விபரீதமாய் ஒரு ஆசை
தானும் மனிதனாக மாறி
அவனோடு போட்டியிட்டு
வெல்ல வேண்டும் என்று..
உருவெடுத்தான் ஒரு மனிதனாக
வடிவெடுத்தான் ஒரு கிழவனாக
கற்றோர் நிறைந்த சபையொன்றில்
சொற்போர் நிகழ்ந்த வேளைதன்னில்
வலுவில் சென்று வாதிட்டான்..
அனைத்திலும் வென்றான்..!
நீரே மேலானவர் யாவரிலும்
என்றார்கள் எல்லோரும் ..
ஆமாம் .ஆமாம்..
என்று ஒரே ஜால்ராக்கள் சப்தம்..
அகம்பாவம் துளிர் விட்டது அந்நேரம் ..
ஆண்டவனுக்கும் கூட..
ஐயோவென அலறியபடி
அங்கிருந்து ஓடியே போனான்
அகம்பாவம் சுமை தூக்கி வீசி..!
கடவுளையே வென்றவர்கள்
நகைத்தேதான் நகர்ந்திட்டார் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
