நாடோடி வாழ்க்கை

நாடோடி
வாழ்க்கையெல்லாம்
வரலாற்றில்
படித்ததுண்டு
அது உண்மையோ
யாருக்கு தெரியும்?

இங்கு
பல வாழ்கையே
நாடோடிகளாய் மாறி
தினம் துடித்ததுண்டு
இந்த உண்மை
யாருக்கு புரியும்?

நகையை அழித்து
நகையை அளித்து
வாடகைக்கு
வழி அமைத்ததுண்டு!

சுதந்திரம் பறித்தே
வாயை தைத்தே
உரிமையானவரும்
அவ்வப்போது
சில மந்திரம்
ஓதுவதுண்டு!

ஒவ்வொரு முறையும்
இல்லங்கள் தேடியே
எங்கள் அகங்களில்
இன்னலும் மின்னலாய்
வருத்துவதுண்டு!

ஆறுதல் சொல்லவோ
எங்களுடனே
பண்ட பாத்திரங்களும்
இங்கு நாடோடிகளாய் !

எழுதியவர் : கவிபுத்திரன் (5-Mar-15, 8:17 pm)
பார்வை : 515

மேலே