ஒரு தமிழனின் புலம்பல்கள் ................

பச்சை தமிழனின் விந்துவில் ஜனித்தவனாய்

ஒரு தமிழச்சி முலைப் பால் குடிதவனாய்

தமிழ் கிழவியின் நன்னூல் படித்தவனாய்

தெய்வப் புலவரின் பொதுமறை அறிந்தவானாய்

பொன்னியின் செல்வன் நூல் படித்து

தமக்கையின் புகழை கண்டவனாய்

அந்நூலில் கண்ட தமிழனின் வீரம்

நெஞ்சுக்குழியின் அகத்தில் கொண்டவனாய்

இத்தனைக் கொண்டும் என்ன பயன்

ஈழத்திலே என் உடன்பிறப்பு அடையும்

இன்னல்களுக்கோ பஞ்சமில்லை

என் குலபெண்டிரும் குழந்தைகளும்

அங்கே ஆயின குப்பைக் கூளங்களாய்

கண்களிருந்தும் காணமல் வாழும்

நான் இங்கிருந்தோ என்ன பயன்

இந்த மானம் கெட்ட வாழ்கை வாழ

மடிந்து போவதே மலையினும் மேல்

இறப்புக்கு கூட பயந்து வாழும்

இந்த இன்னுயிர் போயினும் என்ன பயன்.......

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...... (26-Apr-11, 12:05 pm)
பார்வை : 794

மேலே