பட்டுத் தெளிந்த நினைவு

சிலருக்கு சில நேரம்
செலவாகலாம்
செலவாகும் நேரம் அது
பொன்னாகலாம்
பொன்னாகும் நேரம் அது
கோடி ஆகலாம்
கோடி ஆகும் நேரம் அது
வள்ளல் ஆக்கலாம்
வள்ளலாகும் நேரம் அது
பலர் வறுமை தீரலாம்
வறுமை தீரும் நேரம் அது
வசந்தம் ஆகலாம்
வசந்தம் வந்த நேரம் அது
மகிழ்ச்சி ஆகலாம்
மகிழ்ச்சி வந்த நேரம் அது
நிறைந்து வாழலாம்
நிறைந்து வாழும் நேரம் அது
உணர்ந்து வாழலாம்
உணர்ந்து வாழும் நேரம் அது
உற்று நோக்கலாம்
உற்று நோக்கி வாழும் போது
நினைத்துப் பார்க்கலாம்
ஏறி வந்த படிகள் யாவும்
நினைவில் கொள்ளலாம்
நினைத்து பார்த்து நிம்மதியை
நாடி செல்லலாம்
நாடி செல்லும் பாதை தன்னில்
நகர்ந்து செல்லலாம்
நகர்ந்து செல்லும் போது
பல தடைகள் தாண்டலாம்
தாண்டி செல்லும் போது
மன உறுதி கொள்ளலாம்
கடந்து வந்த பாதையினை
நினைவில் கொண்டால்
சறுகிடாமல் மீண்டும் வாழ்வில்
திருப்தி கொள்ளலாம்
பட்டுத் தெளிந்த நினைவு யாவும்
கட்டுக்கோப்பாய் வாழ்ந்திடவே வழி அமைக்கும்
பழமை நினைந்து வாழந்தால்
தோல்வி அங்கு இல்லையே

எழுதியவர் : பாத்திமா மலர் (6-Mar-15, 1:29 pm)
பார்வை : 92

மேலே