இதழ் பதிக்கவா

பெண்:என்ன பார்க்கிறாய்
என்னை ஏன் பார்க்கிறாய் .
ஆண்: கண்ணை பார்க்கிறேன், உன் கண்ணில்
என்னை பார்க்கிறேன்.

ஆண்: சின்ன பூவாய் சிரிக்கிற
கன்னம்ரெண்டில் சிவக்கிற
மெல்ல இதழை பறிக்கவா
மெல்ல இதழை பதிக்கவா.
பெண்: மெய்யும்,பொய்யும் கலக்குற
மேனியெங்கும் கணை தொடுக்குற.
ஆண்:என்ன சொல்ல,என்ன சொல்ல
இளமை ததும்புது.

பெண்: நான் போகும் பாதையில்
நீயும் வருவது ஏனோ.
ஆண்: உன் பார்வை பட்டதில்
என் பாதை மறந்தது தானே.

பெண்: நான் வீட்டுக்குள் சென்றால்
என்ன செய்வாய்.
ஆண்: என் கூட்டுக்குள் நீயிருக்க
கொஞ்சசெய்வேன்.

பெண்:பாடம் படிக்கணும் கொஞ்சம்
பார்வை குறைக்கணும் நீயும்.
ஆண்:பப்படம் ஆகிடும் நெஞ்சம்
கொஞ்சம் ஓரபார்வை வேணும்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (7-Mar-15, 2:21 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : kaadhal paadal
பார்வை : 131

மேலே