வார்த்தையின் வலிகள் -சகி

வலிகள் ...
கை தவறி விழுந்த
கண்ணாடி துகள்கள்
சிதறியது போல ....
அவன் சிதறிய
சில வார்த்தைகளை
எண்ணி பார்க்கிறேன் ...
என் இதயத்தில்
கீறலாய் அவன்
செதுக்கிய வார்த்தைகளின்
வலிகள் வடுக்களாய் ...
சிதறிய துகள் ஒரு போதும்
இணைவதும் இல்லை ....
அவன் தூற்றிய
வார்த்தைகளை என்
இதயம் என்றுமே
மறக்கபோவதும் இல்லை ....
வார்த்தைகளின் வலிகளை
உணர்ந்துக்கொண்டேன் .....